முதியவர் சடலம் போலீஸ் விசாரணை
திட்டக்குடி : ராமநத்தம் அருகே வயல்வெளியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநத்தம் அடுத்த ஆவட்டி கிராம எல்லையில் கழுதுார் கிராமத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரது வயலில் நேற்று காலை 65 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த ராமநத்தம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனை அனுப்பினர். இறந்தவர் நீலநிற கட்டம் போட்ட கைலி, மஞ்சள், கருப்பு நிற டீஷர்ட் அணிந்திருந்தார். போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!