ADVERTISEMENT
புதுச்சேரி : தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வில்லியனுார் தொகுதி தி.மு.க., முடிவு செய்துள்ளது.
வில்லியனுாரில், தி.மு.க., தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தொகுதி செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ஜலால் ஹைனீப் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பாளர் சிவா பேசுகையில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டடுவது குறித்து பேசினார்.
கூட்டத்தில் தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, அங்காளன், குலசேகரன், அக்பர் பாய், சபரி, ரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தொகுதியில் உள்ள அனைத்து கிளைகளிலும் கருணாநிதி பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொருளாளர் கந்தசாமி நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!