ADVERTISEMENT
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி சார்பில் துாய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மேல வீதியில் துவங்கிய ஊர்வலத்திற்கு நகராட்சி பொறியாளர் தலைமை தாங்கினார். நகராட்சி துணை சேர்மன் முத்துக்குமரன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். நகராட்சி சேர்மன் செந்தில்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலம் கீழ வீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் மேல வீதியை வந்தடைந்தது.
இதில் நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் பங்கேற்று துாய்மை இந்தியா திட்டம், குடிநீர் மாசுபடுவதை தடுத்தல், நீர்நிலைகளை சுத்தமாக வைத்து பாதுகாப்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வெங்கடேசன், அப்பு சந்திரசேகர், மணிகண்டன் ராஜன், அறிவழகன், லதா, கல்பனா சண்முகம், தரணி அசோக், தி.மு.க. நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், இளங்கோ, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!