அறநிலையத்துறை வழக்குகள் தீர்வு காண ஆலோசனை
மதுரை :ஹிந்து அறநிலையத்துறை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையிலுள்ள 1800 வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பது தொடர்பாக மதுரையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அறநிலையத்துறை கமிஷனர் முரளிதரன் தலைமை வகித்தார். தமிழக அரசின் உரிமையியல் தலைமை வழக்கறிஞர் திலக்குமார் முன்னிலை வகித்தார். வழக்குகளுக்கு உரிய நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை குறித்த கால வரம்பிற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில் கால நீட்டிப்பு வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும்.
இதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அதிகரிப்பதை தவிர்க்க முடியும் என வலியுறுத்தப்பட்டது.
அரசு சிறப்பு வழக்கறிஞர் சுப்புராஜ், கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணன், அரசு வழக்கறிஞர் செந்தில் அய்யனார், அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள், தலைமையிடத்து இணை கமிஷனர் ஜெயராமன், தென் மாவட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள், அறநிலையத்துறை இணை, துணை, உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!