ரயில்வே ஆலோசனை குழுக் கூட்டம் மே 31க்குள் உறுப்பினருக்கு அவகாசம்
மதுரை : மதுரை ரயில்வே கோட்டத்தின் உறுப்பினர்கள் ஆலோசனைக் குழு கூட்டம் ஜூன் 15 ல் நடக்கிறது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேச வேண்டிய பொருள் விவரம் மே 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவின் 157 வது மற்றும் இந்தாண்டின் முதல் கூட்டம் ஜூன் 15 மதுரை ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.
இதில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், கலெக்டர், ரயில்வே வாரியத்தால் நியமிக்கப்பட்டவர், வர்த்தகம், தொழில், விவசாயம் சார்ந்தோர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில் கொரோனாவிற்கு முன் நீக்கப்பட்ட ரயில் நிறுத்தங்களை திரும்ப வழங்க வேண்டும்.
ஏற்கெனவே இருந்த சாதாரண பயணிகள் கட்டண ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
பாண்டியன், நெல்லை, முத்துநகர், பொதிகை, செந்துார் ரயில்களுக்கு நிழல் ரயில்கள் (ேஷடோவ் ரயில்) இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் உள்ளன.
இவற்றை உறுப்பினர்கள் உறுதிபட முன்வைக்க வேண்டும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!