கஞ்சா வழக்கு 4 பேருக்கு தண்டனை
மதுரை : மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 2015 ல் வாகன சோதனையில் ஒரு காரிலிருந்து 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மதுரை ஆனையூர் மனோகரன் 39, நரிமேடு தேவதாஸ் 38, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஜெகன் 25, கைதாகினர்.
இவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம் குருகுலம் பகுதியை சேர்ந்தவர் விஜயா 57. இவரிடம் தேனி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். அதே நீதிமன்றம் விஜயாவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!