காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்
காரைக்கால் : காரைக்கால் மாதுார் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் நடந்த முகாமை, நிலைய முதல்வர் ஜெயசங்கர் துவக்கி வைத்தார்.
முகாமில், காளானை, உணவில் சேர்த்து கொள்வதன் அவசியம் மற்றும் வீடுகளில் காளான் வளர்ப்பு குறித்து விளக்கப்பட்டது.
முனைவர் திவ்யா காளான் வகைகள், காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்களான காளான் வித்து தயார் செய்யும் முறை, காளான் படுக்கை தயார் செய்தல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!