ADVERTISEMENT
பண்ருட்டி : பண்ருட்டி நகராட்சி சார்பில் அனைத்து குடியிருப்பு வணிகம் மற்றும் தொழிற்கூட கட்டடங்களில் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, துணை சேர்மன் சிவா, சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஜெயசந்திரன், சோமசுந்தரம், கவுன்சிலர்கள் கதிர்காமன், ராமலிங்கம், கவுரி அன்பழகன், சண்முகவள்ளி பழனி, ரமேஷ், சோழன், முகமது அனிபா, கலைவாணி, மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!