கோடை சிறப்பு பயிற்சி வகுப்பு; 31ம் தேதி பரிசளிப்பு விழா
புதுச்சேரி : ஜவகர் சிறுவர் இல்ல கோடை கால சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு 31ம் தேதி பரிசு வழங்கப்படு கிறது.
பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் கோடை கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஜவகர் சிறுவர் இல்லம், லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லியனூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளிகளில் கடந்த ஏப். 24ம் தேதி முதல் மே 31 தேதி வரை நடக்கிறது.
இப்பயிற்சி வகுப்பில் மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகிறது.
இவர்களில் 6 முதல் 10 வயது, 11 முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களை இரண்டு பிரிவாக பிரித்து போட்டிகள் நடத்தி வரும் 31ம் தேதி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இத்தகவலை ஜவகர் பால் பவன் தலைமையாசிரியர் மணி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!