Load Image
Advertisement

ஜல் சக்தி அபியான் திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

Jal Shakti Abhiyan Project Awareness Procession    ஜல் சக்தி அபியான் திட்ட   விழிப்புணர்வு ஊர்வலம்
ADVERTISEMENT


கடலுார் : கடலுார் மாநகராட்சி சார்பில், ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் ஜவான் பவன் சாலையில் துவங்கிய ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தனர். கூடுதல் கலெக்டர் மதுபாலன், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையார் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர்.

இதில் நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தி அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக வந்த ஊர்வலம் டவுன் ஹாலில் முடிவடைந்தது.

நகர் நல அலுவலர் (பொறுப்பு) ஜாபர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் இளையராஜா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், ஹேமலதா சுந்தரமூர்த்தி, பார்வதி, விஜயலட்சுமி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement