Load Image
Advertisement

சிலிண்டர் வெடித்து வீடு சேதம்; எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

 Damage to housing due to cylinder burst; MLA, grant of relief     சிலிண்டர் வெடித்து வீடு சேதம்; எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்
ADVERTISEMENT


பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சம்பந்தம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது, வீட்டில் நேற்று முன்தினம் காஸ் சிலிண்டர் வெடித்தது.

இதில், வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினர்.நிகழ்ச்சியில், அகத்தியன் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம், அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் ராசாங்கம், அசோகன், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், மாவட்ட இணை செயலர் ரங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் சிவசங்கரி மகேஷ், கிளைசெயலர்கள் பாலமுருகன், ராஜவேல் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement