ADVERTISEMENT
புதுச்சேரி : போக்குவரத்திற்கு இடையூறாக டெம்போக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., மாறன் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் டெம்போக்கள் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் டெம்போக்கள் வழித்தடத்தில் முறையாக செல்லாமல் பாதியில் திரும்பி செல்வதாக புகார் எழுந்தது.
அதனையொட்டி, நேற்று போக்குவரத்து எஸ்.பி., அலுவலகத்தில் டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கான ஆலோ சனைக் கூட்டம்
கூட்டத்தில் எஸ்.பி., மாறன் பேசுகையில், டெம்போ டிரைவர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
டெம்போ ஓட்டும்போது மொபைல்போனில் பேசக்கூடாது. போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் டெம்போக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கக்கூடாது.
இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!