ADVERTISEMENT
நடுவீரப்பட்டு : திருமாணிக்குழி உயர்மட்ட பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
கடலுார் அடுத்த திருமாணிக்குழி கெடிலம் ஆற்றின் குறுக்கே கடந்த 2018ம் ஆண்டு நெடுஞ்சாலை மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 9 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. ஆனால், பாலத்தில் தெரு மின் விளக்குகள் அமைக்கவில்லை.
இந்த பாலத்தின் வழியாக திருமாணிக்குழி, புதுப்பாளையம், சாத்தங்குப்பம், காட்டுப்பாளையம், கொடுக்கன்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராம மக்கள் தினமும் செல்கின்றனர்.
பலர் வெளியூர் மற்றும் பண்ருட்டி, கடலுார் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்கின்றனர்.
இரவு நேரத்தில் வேலை முடிந்து கடலுார் - பண்ருட்டி செல்லும் சாலையில் மும்முனை சந்திப்பில் இறங்கி, இப்பாலம் வழியாக நடந்து செல்ல வேண்டியுள்ளது.
பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் அப்பகுதி முழுதும் இருண்டு கிடக்கிறது.
இதனால், இவ்வழியே செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர்.
எனவே, பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!