திருப்புத்துாரை குளிர்வித்த மழை
திருப்புத்துார் : திருப்புத்தூர் நகரில் நேற்று மாலை பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
திருப்புத்தூர் நகரில் காலை முதல் அதிகமாக வெப்பம் காணப்பட்டது. இடையிடையே மேக மூட்டத்தால் வெப்பம் சற்றே தணிந்து காணப்பட்டது. நேற்று மாலை 5:50 மணி அளவில் மழை பெய்யத் துவங்கியது.
15 நாட்களுக்கு பின், காற்று வீசாமல் நின்று மழை பெய்ததால், தரை குளிர்ந்து வெப்பம் குறைந்தது. காவிரிக்குடிநீர் திட்ட பராமரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால், வீடுகளில் பெண்கள் மழைநீரை சேமித்து வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!