அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை : காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் நவநீதன் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் அயோத்தி, மாநில துணை தலைவர் உடையார் சிறப்புரை ஆற்றினர். மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் அங்காள ஈஸ்வரி, மாவட்ட பொருளாளர் கவிதா, ஒன்றிய தலைவர் சத்தியன், அமுதா, மாநில செயற்குழு ஜீவா பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் செல்லம்மாள் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!