Load Image
Advertisement

தேனம்மாள்பட்டியில் புரவியெடுப்பு விழா

Patronage ceremony at Thenammalpatti    தேனம்மாள்பட்டியில்  புரவியெடுப்பு விழா
ADVERTISEMENT


சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கலியுக மெய் அய்யனார்கோயில் விழாவை முன்னிட்டு தேனம்மாள் பட்டி கிராம மக்கள் சார்பில் புரவியெடுப்பு விழா நடந்தது.

முன்னதாக பிடிமண் கொடுக்கப்பட்டு பிரான்மலை பாப்பாபட்டி புரவிபொட்டலில் புரவிகள் செய்யப்பட்டது. மே 25ம் தேதி புரவிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின் தேனம்மாள்பட்டிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நேற்று மாலை 6:00 மணிக்கு புரவிகள் கலியுகமெய் அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement