Load Image
Advertisement

சிவகங்கையில் ஊட்டச்சத்தை உறுதி செய் முகாம்



சிவகங்கை : சிவகங்கை அருகே காமராஜர் காலனி அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறை சார்பில் 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். சுகாதார துணை இயக்குனர்விஜய் சந்திரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

நடப்பு ஆண்டில் (2022 -2023) 6 வயதிற்கு உட்பட்ட 69,011 குழந்தைகள்,6052 கர்ப்பிணிகள், 5,485 தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 மாதத்திற்குள் பிறப்பு எடை குறைபாடுடைய மற்றும் 877 கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்துள்ளனர். இதில் 1,852 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது தெரியவந்துள்ளது.

இது போன்று ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை, பாலுாட்டும் தாய்மார்களுக்கு வழங்க 1301 ஊட்டச்சத்து பெட்டகம், குழந்தைகளுக்கு 99,900 உடனடியாக சாப்பிடும் ஊட்டச்சத்து பொட்டலமும் வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமகள் நன்றி கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement