ஆக்கிரமிப்புகள், பேனர்கள் அகற்றம்
திண்டுக்கல : திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள்,ரோட்டோர மரங்களில் கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
திண்டுக்கல் சுக்கான்மேடு,ரவுண்டரோடு,ஜி.டி.என்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோர மரங்களில் தனியார் கல்லுாரி,பள்ளிகளின் விளம்பர பலகைகள் ஆனி அடித்து வைத்திருப்பதாகவும், தெருக்கள் ,வீதிகளில் வீட்டின் படிக்கட்டுகளை கட்டியிருப்பதாகவும் புகார் வந்தது. கமிஷனர் மகேஸ்வரி உத்தரவில் உதவி நகரமைப்பு அலுவலர் வள்ளியம்மை,செயற்பொறியாளர் நாராயணன்,ஆய்வாளர்கள் தன்ராஜ்,சித்திரா,சாந்தி,வெங்கடேஷன் உள்ளிட்டோர் ரோட்டோர மரங்களில் கட்டப்பட்டிருந்த விளம்பர பேனர்கள்,மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை அகற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!