பாம்பை கடித்து கொன்ற நாயும் இறந்தது
காரைக்கால் : காரைக்கால் அடுத்த மேலகாசாகுடியை சேர்ந்தவர் இளங்கோவன். பா.ஜ., பிரமுகர். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டு தோட்டத்தில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. அதனை இளங்கோவன் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று காலை இளங்கோவன் வீட்டு தோட்டத்திற்கு சென்ற போது, அவர் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்தது. அருகில் 2 அடி நீளமுள்ள நல்லபாம்பு கடிபட்டு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நள்ளிரவில் வீட்டிற்குள் புக முயன்ற நல்ல பாம்பை, நாய் கடித்து குதறி கொன்றதும், அப்போது, பாம்பு கடித்ததில் நாய் இறந்தது தெரிய வந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!