பொதுமக்களை ஆபாசமாக திட்டிய வாலிபர் கைது
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் பொதுமக்களை ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் சப்இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் நேற்று பொன்முத்து ஸ்டோர் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அண்ணா நகரைச் சேர்ந்த அருண்குமார், 23, என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களை அசிங்கமாக திட்டி போக்குவரத்திற்கு இடையூறு செய்தார்.
இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அருண்குமாரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!