இரண்டே ஆண்டில் ரூ.3215 கோடிக்கு பணிகள் அமைச்சர் நேரு பேச்சு
விருதுநகர் : விருதுநகரில் 1331 கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் திட்ட அடிக்கல், சாத்துார் பாதாளசாக்கடை திட்டம் துவக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி நகர்ப்புற அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுப்பதற்காக இந்தாண்டு மட்டும் ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் 26வது இடத்தில் இருந்த குடிநீர் வடிகால் வாரிய திட்டங்கள் தி.மு.க., ஆட்சிக்கு பின் முதலிடம் வந்துள்ளது. 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஒதுக்கிய பணம் ரூ.11 ஆயிரம் கோடி. ஆனால் தி.மு.க., ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு 2 ஆண்டில் மாநகராட்சிக்கு ரூ.61.76 கோடி, 5 நகராட்சிகளுக்கு ரூ.167.59 கோடி, 9 பேரூராட்சிகளுக்கு 82.28 கோடி, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.2905 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.3215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, என்றார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உட்பட பலர் பங்கேற்றனர். இரவு 7:30 மணிக்கு நடக்க வேண்டிய நிகழ்ச்சி 2 மணி நேரம் தாமதமாக 9:30 மணிக்கு நடந்ததால் அரசு அலுவலர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!