அல்லிநகரம் கோயிலில் தீர்த்த பூஜை
திருப்புவனம், : திருப்புவனம் அருகே அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயிலில் நடந்த தீர்த்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அல்லிநகரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குல தெய்வமாக விளங்கும் அல்லிநகரம் தண்டீஸ்வர அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி தீர்த்த பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டு மே 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
தினசரி அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று மதுரை நுாபுர கங்கையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அல்லிநகரம் கிராமத்தை பக்தர்கள் வலம் வந்தனர். காலை 11:00 மணிக்கு தண்டீஸ்வர அய்யனார் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கு தீர்த்தபூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தீர்த்தபூஜை நடைபெறுவதை ஒட்டி நேர்த்தி கடன் இருந்த பக்தர்கள் கோயில் வாசலில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தீர்த்தபூஜையை முன்னிட்டு தண்டீஸ்வர அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை அல்லிநகரம், அ. வெள்ளக்கரை, அ.முத்துப்பட்டி, அ. காலனி கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!