தராசு விலையில் 45 சதவீதம் முத்திரை கட்டணம் வசூல் வணிகர்கள் வேதனை
மதுரை : எடையளவு தராசுகளுக்கான முத்திரை கட்டணம் தராசின் விலையில் 45 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது என, வணிகர்கள் வேதனை தெரிவித்தனர்.
உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி கூறியதாவது: கடந்த முறை முத்திரை கட்டணம் 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அப்போதே ஆட்சேபனை தெரிவித்தும் நடைமுறைப்படுத்தினர். தற்போது மேலும் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 30 கிலோ தராசுக்கு முத்திரையிட ரூ.600 கட்டணம்.
புதிய அறிவிப்பின்படி ரூ.900. இதுதவிர வந்து செல்லவும் ரூ.100 செலுத்த வேண்டும். இந்த உயர்வு ரூ.2800க்கு விற்கும் தராசு விலையில் 45 சதவீதம் ஆகும்.
சாலையோரம் காய்கறி, பழங்கள், பலசரக்குகளை விற்போர் 10 கிலோ தராசுகளை பயன்படுத்துகின்றனர். இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது இச்சிறு வியாபரிகளே.
கொரோனா காலத்தில் இவர்கள்தான் மக்களிடையே உணவுப் பிரச்னையின்றி பார்த்துக் கொண்டனர். அவர்கள் இப்போது மீண்டு வரும் நிலையில், இந்த கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும். தொழிலாளர் நலத்துறை பரிசீலிக்க வேண்டும், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!