மூன்று நாட்களாக மின்தடை: கிராமத்தினர் ரோடு மறியல்
நிலக்கோட்டை : சிலுக்குவார் பட்டியில் மூன்று நாட்களாக டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சிலுக்குவார்பட்டியில் மே 23ல் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தன. இதனை மின்வாரியத்தினர் சரி செய்யாத காரணத்தினால் அப்பகுதி முழுவதும் மூன்று நாட்களாக மின்வினியோகம் பாதிப்படைந்தது. பொதுமக்கள் மின்வாரியத்தினரை தொடர்பு கொண்டும் இதோ அதோ என நாட்களை கடத்தி வந்தனர். மாற்று ஏற்பாடாக வேறு பகுதியிலிருந்தும் மின்சாரம் வழங்க முடியவில்லை. இதனால் குடிநீர் முதல் அனைத்து பிரச்னைகளும் தலை துாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ரோடு மறியலில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் சமரசம் செய்தும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. மின்வாரிய உதவி செயற் பொறியாளர் மூர்த்தி, ஊராட்சித் தலைவர் செல்வி ஜெயசீலன்,' இரவுக்குள் டிரான்ஸ்பார்மர் பழுதை நீக்கி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என,உறுதி அளிக்க கலைந்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!