ADVERTISEMENT
விருதுநகர் : விருதுநகரில் பாவாலி ஊராட்சி தலைவர் வீட்டு நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்காததால் நுாறு நாள் பணியில் இருந்து நிறுத்தியதாக கூறியதால், ஆத்திரமடைந்த எரிச்சநத்ததில் மக்கள் ரோடு மறியல் செய்தனர்.
விருதுநகர் பாவாலி ஊராட்சி தலைவர் அழகம்மாள். இந்த ஊராட்சிக்குட்பட்ட சீனியாபுரம், சந்திரகிரிபுரம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி தலைவர் அழகம்மாளின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கிராம மக்கள் யாரும் வரவில்லை என கூறி நுாறு நாள் வேலை திட்டத்திற்கு பாவாலி ஊராட்சிக்குட்பட்ட மக்கள் யாரும் வரக்கூடாது என்று கூறியதாக தெரிவித்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் எரிச்சநத்தம் ரோட்டில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆமத்துார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் மக்கள் கலைந்து சென்றனர்.
3வது வார்டு உறுப்பினர் கார்த்திகை செல்வி கூறியதாவது: மக்கள் வீடுகளில் விஷேசம் நடந்தாலும் இதே போல் ஊராட்சி நிர்வாகம் விடுமுறை விடுமா. ஊராட்சி தலைவர் மக்கள் எதையுமே கண்டு கொள்வதில்லை, என்றார்.
இது குறித்து ஊராட்சி தலைவர் அழகம்மாள் கூறியதாவது: இது தவறான தகவல். பணிக்கு வந்த மக்கள் வந்த வண்டி பழுதாகி விட்டது. பணித்தள பொறுப்பாளர் பேசியதால் மக்கள் அவ்வாறு செய்துள்ளனர். நாங்கள் பேசி சமரசம் செய்து விட்டோம். விடுப்பு யாரும் எடுக்கவில்லை. பணிகள் நடந்தன, என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!