திறந்தவெளி பார்களாக மாறும் பொது இடங்கள்; நீர்நிலைகள், மறைவான பகுதிகளில் விதிமீறல்
ராஜபாளையம், மே 27-- விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த டாஸ்மாக் பார்கள் சீல் வைக்கபட்டதால் பாதிப்பிற்கு உள்ளாகும் பொது இடங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் விதி மீறல்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் இயங்கி வந்த 100 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி சீல் வைக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான குடிமகன்கள் குடும்பத்தினரிடையே குடிக்கும் பழக்கத்தை தவிர்க்கும் விதமாக பார்களில் குடித்து வந்தனர். இந்நிலையில் பார்கள் சீல் வைக்கப்பட்டதால் மது வாங்கி குடிப்பதற்கான இடங்களை தேடி வருகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமான கண்மாய் கரை, பாசன விவசாய நிலம், ஓடைஒட்டிய பகுதிகள், பெட்டி கடை, பொது கழிப்பறை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்டவற்றை திறந்தவெளி பாராக உபயோகித்து வருகின்றனர்.
இவற்றில் கூட்டமாக சேர்ந்து குடித்து போதை தலைக்கேறியதும் பாட்டில்களை உடைத்து ஆங்காங்கே வீசுவதும், பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை நீர் நிலைகளில் விட்டு வருவதும் தொடங்கியுள்ளது.
இதனால், பாசன பகுதிகள் பாதிப்பு ஏற்படுவதோடு உடைந்த பாட்டில்கள் விவசாய பணியில் ஈடுபடுவோரின் கால்களை பதம் பார்க்கிறது. இது தவிர தெருக்களில் இயங்கும் பெட்டி கடைகள் வாடிக்கையாளர்களின் வருகை எதிர்பார்த்து விதி மீறல்களில் ஈடுபடுவதும் நடைபெறுகிறது.
இதே நிலை தொடர்ந்தால், பெண்கள் உள்ளிட்டோர்க்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். மாவட்ட நிர்வாகம் நீர் நிலைகள், பொது இடங்கள், கேட்பாரற்ற பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!