Load Image
Advertisement

தமிழகத்தில் கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லை: பன்னீர்செல்வம்

சென்னை-'தி.மு.க., அரசின் அலட்சியத்தால், கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
Latest Tamil News

அவரது அறிக்கை:



திருப்பூர் மாவட்டம், அவினாசியில், லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 23ம் தேதி, கோவில் நடை திறக்கப்பட்டபோது, பலிபீடம் அலங்கோலப் படுத்தப்பட்டும், 63 நாயன்மார்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டும், கோபுர கலசங்கள் சுக்கு நுாறாக உடைக்கப்பட்டும் இருந்தன.

கோவிலுக்குள் உள்ள முருகன் சன்னிதியில் வெண்கலத்தால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவல் கொடியுள்ள இரண்டு வேல்கள் மற்றும் சில பொருட்கள் காணவில்லை.

இதன் காரணமாக, இறைவனுக்கான பூஜைகள் ஏதும் அன்று நடைபெறவில்லை. கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வந்தாலும், கோவிலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.
Latest Tamil News
தி.மு.க., அரசின் அலட்சியப் போக்கு முக்கிய காரணமாக உள்ளது. பல கோவில்களில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுவதாக, பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோவில்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பதை, ஓர் அபசகுனமாக பக்தர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காதிருப்பதையும், அனைத்துக் கோவில்களுக்கு பாதுகாப்பு அளிப்பதையும், அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (9)

  • DVRR - Kolkata,இந்தியா

    ஆம் உன்மை .... மிக மிக அதிக பாதுகாப்பு தேவை

  • Sankaran - Bangalore,இந்தியா

    திராவிட மாடல் அரசு என்பது "same side goal" க்கு சமம். இந்து கோவில் bull dozer கொண்டு தாக்குவது, மரபுகளை இழிவாக பேசி, மாற்று மதத்தினர் ஒட்டுபெறுவதே திராவிட மாடல் கொள்கை ஆகும். இவர்களது காலத்துல கோவில்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது ரொம்ப சிரமம்.

  • அப்புசாமி -

    முன்னாடி லோக்கல்.பெருச்சாளிகள் சாப்புட்டாங்க. பெரிய வருமானமும் இல்லை. அறநிலையத்துறை கண்ட் ரோலுக்கு வந்த பின், பழம்பெருச்சாளிகளை துரத்திட்டு புது பெருப்பெருச்சாளிகள் நுழைன்ஹ்சு சாப்புடறாங்க. வேற எதுவும் இல்லை . இதுவும் மாறும் .

  • A P - chennai,இந்தியா

    சிலை திருட்டை தடுக்க அமர்த்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு, அவரது அலுவலகத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட தராத காட்சியை சேர்ந்த இவர். பேச வந்துட்டார் கோவிலைப் பற்றி. இவர் ஆட்சியில் அற(மில்லா) துறையை ஒழித்துக் கட்டி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை. Read more at: s://www.dinamalar.com/news_detail.asp?id=3331904(மில்லா)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கலாச்சாரத்தை அழிப்பதில் திராவிடம் அரை நூற்றாண்டாக இது போல பயித்திய தொழில் நுணுக்கத்தை பயன்படுத்தி வந்திருக்கிறது. திராவிடம் இந்துக்களின் நண்பன் என்று நம்பும் ஏமாளி உபிஸ் இருக்கும் வரை அவர்களது ஆட்டம் தொடரும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்