ADVERTISEMENT
சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே பொத்துமரத்து ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மக்கள் எதிர்ப்பின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே பொத்துமரத்து ஊருணியை துார்வாரி பூங்கா அமைப்பதற்காக நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஊருணியை துார்வாருவதற்காக அளவீடு செய்த போது, 4.99 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொத்துமரத்து ஊருணியில் 35 சதவீதத்திற்கும் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 50 க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.
ஊருணி துரர்வாரும் பணி 2022 மே ல் பூமி பூஜை உடன் தொடங்கியது. தொடர் மழை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக துார்வாரும் பணி முழுமையடையவில்லை. 2023 ஏப். ல கலெக்டர் ஜெயசீலன் ஊருணியில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றி துார்வாரும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நகர அமைப்பு அலுவலர் மதியழகன், ஆய்வாளர் கார்த்திகேயன், சுந்தரவள்ளி மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் 4 வீடுகள், 3 வணிக கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
தொடர்ந்து சில நாட்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கிடப்பில் இருந்த நிலையில், ஊருணியில் ஆக்கிரமித்து பஸ் ஸ்டாண்ட் எதிரே இருந்த வணிக கடைகளை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடம் 10 நாட்களுக்கு முன்பு தகவல் அளிக்கப்பட்டது. நேற்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் 8 கடைகள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கடைகளை இடிக்க முயன்ற போது, எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் ரோட்டில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை பாதியில் நிறுத்தப்பட்டது.
டி.எஸ்.பி., தனஞ்செயன் எதிர்ப்பு தெரிவித்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலையச் செய்தார். மேலும் அமைதி கூட்டம் நடத்திய பின்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!