பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட அழைப்பு
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் சிப்காட் மையத்தில் உள்ள உணவு பூங்காவில் உணவு பதப்படுத்தும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, காலியாக உள்ள 11.5 ஏக்கர் நில காலி மனைகள் 95 வருட குத்தகை அடிப்படையில் மாநில வேளாண் வாரியம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிட்கோ இணையதளம் www.tansidco.gov.in மூலம் மே 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள அல்லது விரும்புவோர் காலிமனைகளை குத்தகை மூலம் பெற்று தொழிலை விருத்தி செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு வேளாண் வணிக துணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!