முதல் முறையாக மல்லிகை தொகுப்பு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மல்லிகை சாகுபடியை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கூட்டும் வகையில் முதல் முறையாக மல்லிகை சாகுபடியாளர்கள் தொகுப்பு அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இத்தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு மல்லிகை சாகுபடி பரப்பை அதிகரிக்க மல்லிகை கன்று, பூக்களை அறுவடை செய்து எடுத்து செல்ல நெகிழி கூடைகளும், சந்தைகளுக்கு எடுத்து செல்ல குளிர் பதன பெட்டிகளும், பருவத்திற்கு ஏற்றவாறு மல்லிகை கன்றுகளை பராமரிக்க கவாத்து கத்திரிகள், பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறிகள் போன்றவை மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகள், தங்களது ஆதார் நகல், நில உடமை ஆவணங்களுடன் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி வட்டார விவசாயிகள் பயன்பெறலாம். பருவமில்லா காலங்களில் மல்லிகை உற்பத்தி அதிகரிக்க மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகளும் வழங்கப்பட உள்ளது, என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!