தாமதமாகும் நகராட்சி கமிஷனர் நியமனம் பணிகள் தொய்வால் மக்கள் அதிருப்தி
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தாமதமாகும் நகராட்சி கமிஷனர் நியமனத்தால் பணிகள் தொய்வை சந்தித்துள்ளன. இதனால் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சியில் 2 வாரங்கள் முன் கமிஷனர் ஸ்டான்லி பாபு சேலம் மாநகராட்சிக்கு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது வரை புதிய கமிஷனர் நியமனம் செயப்படவில்லை. இதனால் பணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. அதாவது நகராட்சியை பொறுத்தமட்டில் அனைத்திற்கும் பொறுப்பதிகாரி கமிஷனர் தான்.
இந்நிலையில் பிறப்பு, இறப்பு சான்றுகளில் கையொப்பம் இடுவது உள்ளிட்ட பல்வேறு சிறு சிறு விஷயங்களும் கமிஷனரை சார்ந்து தான் உள்ளது. தற்போது பொறியாளர் கூடுதல் பொறுப்பு பார்த்தாலும், இது பொறியியல் பிரிவில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.
தற்போது நகராட்சி பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் பணிகள் தீவிரமடைந்து வரும் சூழலில் இதில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளிலும் கமிஷனர் இல்லாதது பெரும் தொய்வை ஏற்படுத்தி வருகிறது. இவை தவிர அடிப்படை வசதிகள், நகருக்கு நமக்கு நாமே திட்டத்தில் புதிய பணிகள் போன்றவை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆகவே அரசு விரைந்து விருதுநருக்கு கமிஷனரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!