வேடசந்துாரில் மஞ்சள் பை; ரூ.10 க்கு துவக்கம்
வேடசந்துார் : வேடசந்துார் ஆத்து மேட்டில் போலீஸ் கூண்டு அருகே தானியங்கி இயந்திரம் மூலம் ரூ.10 க்கு மஞ்சள் பை வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.10 ( இரண்டு 5 ரூபாய் காசுகள், 5 இரண்டு ரூபாய் காசுகள்) செலுத்தினால், தானியங்கி இயந்திரத்தின் மூலம் மஞ்சள் பை வழங்கல் தொடக்க விழா நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் மணிமாறன் தலைமை வகித்தார். தாசில்தார் விஜயலட்சுமி ரூ.10 செலுத்தி மஞ்சள் பை இயந்திரத்தை துவக்கி வைத்தனர்.
உதவி பொறியாளர்கள் உதயராணி, திவ்யா, வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார், குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் பொம்முசாமி, கல்வார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரமேஷ், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சந்திரசேகர், செயலாளர் நேரு மாணிக்கம், அமைதி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பவித்ரா பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!