Load Image
Advertisement

41 குண்டங்களுடன் 16 ஆயிரம் ச.அடியில் தயாராகும் பிரம்மாண்ட யாகசாலை

A grand Yagasala is prepared in 16,000 square feet with 41 kundas    41 குண்டங்களுடன் 16 ஆயிரம் ச.அடியில் தயாராகும் பிரம்மாண்ட யாகசாலை
ADVERTISEMENT


சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரம்மாண்ட யாகசாலை தயாராகி வருகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இதற்காக 16 ஆயிரம் சதுர அடி பரப்பில் பிரமாண்ட உத்தமபக்ஷ்ம் யாகசாலை தயாராகி வருகிறது.

வேறு எந்த அய்யனார் கோயிலிலும் இல்லாதஅளவிற்கு 33 யாக குண்டங்களும் பரிவார மூர்த்திகளுக்கு 8 குண்டங்களும் 9 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் சிவாச்சாரியார்கள் 95 பேர் யாக பூஜைகளை நடத்தி வைக்கின்றனர். மே 29ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன்யாகசாலை பூஜை தொடங்கி ஆறு கால பூஜையாக ஜூன் 1 வரை நடக்கிறது.

தினமும் மூன்று வேளையும் திருப்பணி குழு சார்பில்பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 1ம் தேதி காலை 10:45-11:35 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அன்றைய தினம் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாகசாலை, மின்விளக்கு அமைப்பதற்கான பொறுப்பை சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1975- -76ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் சார்பாக அதன் தலைவர் சொக்கலிங்கம் புதூரைச் சேர்ந்த வீ.வீரப்பன் செட்டியார் ஏற்றுக்கொண்டுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement