பெரும்பச்சேரியில் ஜல்லிக்கட்டு 500 காளைகள் பங்கேற்பு
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள பெரும்பச்சேரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மானாமதுரை அருகே உள்ள பெரும்ச்சேரியில் சமயண சாமி கோவில் களரி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது.
இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 350 க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
முன்னதாக கோயில் காளைகள் வாடிவாசலில்இருந்து அவிழ்த்து விடப்பட்ட போது மாடுபிடி வீரர்கள் அதனை தொட்டு கும்பிட்டு மரியாதை செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும்,வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன.
காயமடைந்த வீரர்களுக்கு மானாமதுரை அரசு மருத்துவமனை முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள்முதலுதவி சிகிச்சை அளித்து சிவகங்கை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை பெரும்பச்சேரி, மேட்டுமடை கிராமத்தினர் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!