பெண் தவற விட்ட பணம் ஒப்படைத்த ஆட்டோக்காரர்
தேவகோட்டை : தேவகோட்டை அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் மனைவி வள்ளிமயில். 40.,
நேற்று காலை தேவகோட்டையிலுள்ள வங்கியில் கட்டுவதற்காக ரூ. 62 ஆயிரத்து 430ஐ கைப்பையில் எடுத்து க்கொண்டு டூவீலரில் வந்தார். பணப்பையை டூவீலர் கம்பியில் மாட்டி எடுத்து வந்தார். வழியில் பை தவறியதை வள்ளிமயில் கவனிக்கவில்லை. அந்த வழியாக வந்த ஆட்டோக்காரர் கண்ணன் கீழே கிடந்த கைப்பையை எடுத்து பார்த்துள்ளார். பணம் இருந்ததால் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தார்.
இன்ஸ்பெக்டர் பையில் இருந்த முகவரியை ஆய்வு செய்து தவறவிட்ட வள்ளிமயிலை வரவழைத்து ஆட்டோக்காரர் கண்ணன் முன்னிலையில் ஒப்படைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!