ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கட அன்னைகள் தெரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நீண்ட நாளாக பட்டுப்போன மரம் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனை பள்ளி திறக்கும் முன்பு அகற்ற பெற்றோர் விரும்புகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கட அன்னைகள் தெருவில் ஒரு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் பள்ளி நேரங்களில் இப்பகுதியில் மிகவும் போக்குவரத்து நெருக்கடி காணப்படும்.
இந்நிலையில் பெண்கள் பள்ளி அருகில் பட்டுப்போன மரம் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. தற்போது ஆங்காங்கே கிளைகள் முறிந்து வருகிறது. எப்போது சரிந்து விழும் என தெரியவில்லை. இதனால் பள்ளி மாணவர்களும், அப்பகுதி வழியாக செல்பவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, பள்ளி திறக்கும் முன்பு பட்டுப்போன மரத்தை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!