Load Image
Advertisement

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை?..

Medical insurance card for underprivileged children?    ஆதரவற்ற குழந்தைகளுக்கு  மருத்துவ காப்பீடு அட்டை?..
ADVERTISEMENT
சென்னை-''ஆதரவற்ற குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு, முதல்வர் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளையும், முதல்வர் காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, அமைச்சர் சுப்ரமணியன் கூறியதாவது:

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளும், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுவோரும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகளையும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும், காப்பீடு திட்டத்தில் இணைப்பது தொடர்பாக ஆராயப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (3)

  • என்னதான் நடக்கும்? - marathahalli, bangalore,இந்தியா

    நல்ல செயல்... ஆனா கார்பொரேட் குடும்பம் இதிலும் திருட உதவாதீங்க

  • Sekhar Guruswamy - Chennai,இந்தியா

    சபாஷ் மந்திரி அவர்களே. இதுபோல் நல்ல திட்டம் கொண்டு வாருங்கள். மக்களின் ஆசியும், அன்பும் உங்கள் ஆட்சியினை வந்து அடையும்

  • raja - Cotonou,பெனின்

    இதுல போலி கணக்கெழுதி எவ்வளவு கொள்ளை அடிக்க போரானுவோலோ...ஆதரவற்ற குழந்தை தானே எவன் கேள்வி கேக்க போரான்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்