ADVERTISEMENT
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே காரடர்ந்தகுடியை சேர்ந்தவர் நாகநாதன் 52, சிவகங்கை மாவட்டம் தேவினிப்பட்டி மணி மகன் டிரைவர் முருகன் 33. இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் மென்னந்தி கிராமம் வழியாக மினி சரக்கு வாகனத்தில் 40 கிலோ கொண்ட 40 மூடைகளில் ரேஷன் அரிசியை புதுக்கோட்டைக்கு கடத்தினர்.
இவர்களின் வாகனத்தை ராமநாதபுரம் குடிமைபொருள் குற்ற புலனாய்வு போலீஸ் எஸ்.ஐ., சிவஞான பாண்டியன் தலைமையில் ஏட்டுகள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி, தெய்வேந்திரன் ஆகியோர் சோதனை செய்ததில் இருவரும் ரேஷன் அரிசி கடத்தியது உறுதி செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!