நடை பயண பிரசாரம்
பரமக்குடி ; தொழிலாளர் உரிமையை காக்கும் வகையில் மே 30ல் சி.ஐ.டி.யு., சார்பில் திருச்சியில் நடக்க உள்ள பேரணி முன்னோட்டமாக பரமக்குடியில் பிரசார நடை பயணம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாநில உதவி பொது செயலாளர் குமார் தலைமையில் பரமக்குடி வழியாக நடை பயணம் வந்தனர். தொடர்ந்து பார்த்திபனூர், மானாமதுரை வழியாக செல்கின்றனர்.
இவர்களை பரமக்குடி கிளை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர். எல்.ஐ.சி., லிகாய் முகவர் சங்கத்தினர் பங்கேற்றனர். கிளை சங்க நிர்வாகி அண்ணாதுரை தலைமையில் வரவேற்று நடை பயணத்தில் பங்கேற்று வழி அனுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!