காரைக்குடியில் கனமழை
காரைக்குடி : காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
நேற்று மாலை காரைக்குடியில் மேகமூட்டம் காணப்பட்டது.தொடர்ந்து, மாலை 5:00 மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
தேவகோட்டை: தேவகோட்டையில் நேற்று மாலை 6:00 மணிக்கு கோடை மழை கொட்ட துவங்கியது. தேவகோட்டை மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களிலும் மழை பெய்தது.மாலையில் தொடங்கியமழை தொடர்ந்து இரவிலும் நீடித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!