ADVERTISEMENT
சிவகங்கை, : புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை கொண்டு வருதல் உட்பட 27 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
சிவகங்கை அரண்மனை வாசலில் ராமநாதபுரம், சிவகங்கை மண்டலஅளவிலான உண்ணாவிரதத்திற்கு மாவட்ட தலைவர் எம்.சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். மாநில செயலாளர் கண்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
முன்னாள் மாவட்ட தலைவர் சங்கரசுப்பிரமணியன், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாநில செயலாளர் வாசுகி, சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள், அரசு ஊழியர்கள்சங்க மாவட்ட துணை தலைவர் நாச்சியப்பன், பானுமதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் நல விடுதி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பூமிராஜ், மாநில செயற்குழு வேல்முருகன், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, மாவட்ட தணிக்கையாளர் குணசேகரன், ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் விக்டோரியா, டான்சாக் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் எம்.செல்வக்குமார் நிறைவுரை ஆற்றினார். வட்டக்கிளை தலைவர் எம்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!