ADVERTISEMENT
ராமநாதபுரம் ; ராமநாதபுரம் நகரில் சின்னக்கடை பகுதியில் கேணிக்கரை போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகம் படும் படியாக நின்றிருந்த காரை சோதனையிட்டனர்.
அதற்குள் 14 சாக்கு மூடைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்ததில் உள்ளே தடை செய்யப்பட்ட கூலீப் பொட்டலங்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 776. கூலீப் பொட்டலங்கள், காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வந்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!