வாரச்சந்தையில் ரசாயன மாம்பழம் விற்பனை
மானாமதுரை : தமிழகத்தில் மாம்பழ சீசன் அதிகரித்துள்ள நிலையில் மானாமதுரை வாரச்சந்தையில் ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் மீன்கள் போன்ற பொருட்களை 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது மாம்பழ சீசன் அதிகரித்ததை தொடர்ந்து வாரச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள் மாம்பழ விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
விற்பனை செய்யும் வியாபாரிகள் சிலர் மாம்பழங்கள் ரசாயன கல்மூலம் பழுக்க வைத்து விற்பதால் அதனை வாங்கிச் செல்லும் மக்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!