போலீஸிடம் சொல்லாம போனா இப்படி தான் அடி வாங்கணும்

தி.மு.க., அமைப்பு செயலர்ஆர்.எஸ்.பாரதி: தமிழகத்திற்கு வரும் முதலீடு தொடர்பான செய்திகளை திசை திருப்பவே 'ரெய்டு' நடத்தப்படுகிறது. செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்பதற்காகவே, வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
பா.ஜ.,வின் தரம் தாழ்ந்த அரசியலையே, இது காட்டுகிறது. போலீஸ் துறைக்கு தெரிவிக்காமல், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
முதல்வரின் மக்கள் நலத் திட்டங்கள், மக்கள் மத்தியில் நல்ல விதமாக சென்றடையும் நிலையில், பா.ஜ., இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எத்தனை 'ரெய்டு'கள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும்; கவலை இல்லை. தி.மு.க.,வுக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது.
தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன்: லோக்சபா தேர்தல் நெருங்குவதால், இனி வரக்கூடிய நாட்களிலும் இதுபோன்ற வருமான வரி சோதனைகள் நடக்கும். எதிர்க்கட்சிகளை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த சோதனை நடக்கிறது.

சோதனைக்கு செல்லும் வருமான வரித் துறையினர்,போலீசாரை உடன் அழைத்து செல்ல வேண்டும். இல்லையென்றால், தாக்குதல்களை எதிர்கொள்ள தான் வேண்டும்.
தி.மு.க., பார்க்காத வழக்குகளோ, சோதனைகளோ இல்லை. இதையும் தி.மு.க., திடமாக சந்திக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்த வந்த, வருமான வரி அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை, தி.மு.க.,வினர் உடைத்தனர். அதிகாரிகளை தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், போலீசாரிடம் அவர்கள் பாதுகாப்பு கேட்டுள்ள தகவல், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனுக்கு தெரியவந்தது. உடனே அவர், அறிவாலயத்தில் இருந்த மாநில நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு, கரூர் தி.மு.க.,வினர் கட்டுப்பாட்டை மீறாமல், கண்ணியத்துடன் நடக்க வேண்டும் என, அறிவுறுத்தும்படி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (30)
யாரது சோல்ரது அடியாட்கள் கம்ப்பேணி யா இல்லே
திருடனை பிடிக்க யாராவது முன்னாடியே சொல்லிட்டு போவார்களா?
ஈசனின் தண்டனை உங்க எல்லோருக்கும் கடுமையா இருக்கும்
பாரதி: களங்கத்துக்கு எப்படி மேற்கொண்டு களங்கம் ஏற்படுத்தமுடியும் . காவல்துறைக்கு முன்னமேயே தெரிவித்திருந்தால் செந்தில் பாலாஜியோ வேறு யாரோ எல்லாவற்றையும் மறைத்திருக்கமுடியும்.
Yes, have to get dmk permission. OK sir.