ADVERTISEMENT
பட்டணம்காத்தான் ; ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொட்டிகளில் குடிநீர் இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளதால் மக்கள் விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் அலுவலகங்கள் என பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
அவர்களின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை பெயரளவில் உள்ளன. குறைதீர் கூட்டம் நடைபெறும் பழைய கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து பல மாதங்களாக காட்சிப்பொருளாக உள்ளது.
இதனால் மக்கள் கடைகளில் குடிநீரை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
ஆகையால் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் தொட்டிகள் செயல்படவும், கூடுதலாக குடிநீர் தொட்டி வைக்கவும் பட்டணம்காத்தான் ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு புதிய கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!