ADVERTISEMENT
ராமநாதபுரம் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலையில் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம், தேவிப்பட்டினம், திருபுல்லாணி, உத்தரகோசமங்கை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு அதிகளவில் பயணிகள் வருகின்றனர். இதனால் நகர், புறநகர் பகுதி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வீடுகளில் கால்நடை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக வெளியே விட்டு விடுகின்றனர். இதனால் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் ரோடுகளில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சில நேரங்களில் மாடுகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றன. எனவே நகர், ஊராட்சி பகுதிகளில் கண்டபடி சாலையில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!