தேவகோட்டை ஒன்றிய கூட்டம்
தேவகோட்டை : தேவகோட்டை ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராசாத்தி, கமிஷனர் பாலகிருஷ்ணன், பி.டி.ஓ. விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ரவி: திட்ட பணிகளில் ரோடு ஒதுக்கும் போது 42 ஊராட்சிகளிலும் பரவலாக பணிகள் நடைபெறும் வகையில் ஒதுக்க வேண்டும்.
ஆரோக்கிய ஜான்சி ராணி: சின்னக்கிளியூர் ரோடு மோசமாக உள்ளதாக பல முறை கூறி வருகிறேன். பணி எதுவும் நடக்கவில்லை.
பொறியாளர்: கிளியூர் ரோடு அனுப்பி அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் அனுப்பி அனுமதி கேட்போம்.
தலைவர்: சிவகங்கை மாவட்டத்தில் பிரதமர் திட்டத்தில் ரூ. 9 கோடிக்கு பணிகளை செய்துள்ளது நமது ஒன்றியம் தான். தற்போது மூன்றரை கோடி ரூபாய்க்கு பாலம், ரோடு பணி செய்ய உள்ளோம். கவுன்சிலர்கள் பரிந்துரையில் ஒன்றரை கோடி ரூபாயில் பணிகள் தேர்வு செய்துள்ளோம்.
தோட்டக்கலை பண்ணை அருகிலுள்ள ஓன்றியத்துக்குரிய காலனி வீடுகள் பாழடைந்தும் சுற்றியுள்ள இடத்தில் புதர் மண்டியும் உள்ளது. இதனை பயன்படுத்தி அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். சர்வேயர்கள் அளந்து ஆக்கிரமிப்பை அகற்றி ஒன்றிய இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!