ADVERTISEMENT
சாத்துார் : சாத்தூர் வெள்ளக்கரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சாத்தூர் வைப்பாறு கரையில் அமைந்துள்ள வெள்ளை கரை ரோடு பழைய டிரங்க் ரோடு -நான்கு வழிச்சாலையை இணைக்கும் ரோடாக உள்ளது. எம். எல் .ஏ. ,அலுவலகம் திருமண மண்டபங்கள், கோயில்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் அதிக அளவில் உள்ளது.
இதனால் காலை முதல் மாலை வரை வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த ரோட்டில் பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம், புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டது.தார் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
பள்ளி வாகனங்கள் ஆட்டோக்கள் இந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. திருமணம் போன்ற விசேஷ காலங்களில் இருசக்கர வாகனங்களில் திருமண மண்டபங்களுக்கு வரும் வருபவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
மேலும் தற்போது ரோடு மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் இந்த வழியாக நடந்து வந்த வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
எனவே வெள்ளக் கரை ேராட்டில் மந்தகதியில் நடந்து வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணியையும் பாதாள சாக்கடை திட்டத்தையும் விரைந்து முடித்து வெள்ளைக்கார ரோட்டில் புதியதாக தார் ரோடு அமைத்திட வேண்டுமெனமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!