ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் குளத்தில் பாலிதீன் குப்பையால் பக்தர்கள் அருவருப்பு
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் தீர்த்த குளத்தில் பாலிதீன் பை, குப்பை குவிந்துள்ளதால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பாத்தியமான நம்புநாயகி அம்மன் கோயில் புதுரோட்டில் உள்ளது. ராமேஸ்வரம் நகரின் எல்லை காத்த அம்மனாக வணங்கப்படும் இக்கோயில் பழமையானது. இக்கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
தினமும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்யும் நிலையில் கோயில் அருகே உள்ள தீர்த்த குளத்தில் முருகன், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் தினமும் காலை, மாலையில் இங்குள்ள குளத்தில் நீராடுகின்றனர்.
ஆனால் குளத்தில் பாலிதீன் பை, கப்புகள், குப்பை குவிந்து சுகாதாரமின்றி அலங்கோலமாக கிடக்கிறது. இதனால் பக்தர்கள் அருவருப்புடன் நீராடி செல்கின்றனர். எனவே குளத்தில் குப்பையை அகற்றி சுகாதாரம் பராமரிக்க திருக்கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!