பரமக்குடி நகர் பகுதியில் பைக் ரோமியோக்கள் அட்டகாசம்
பரமக்குடி ; பரமக்குடியில் பைக் ரோமியோக்கள் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நெடுஞ்சாலைகளில் ரேசிங் செய்வதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் டூவீலர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் ரேசிங் டூவீலர்களை பயன்படுத்துகின்றனர்.
பரமக்குடி நகராட்சி குறுகிய தெருக்களை கொண்ட பகுதியாகும். மேலும் ஓட்ட பாலம் முதல் ஐந்து முனை ரோடு, ஆர்ச், பஸ் ஸ்டாண்ட், சந்தை என ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரி நாட்களில் பைக் ரோமியோக்கள் மாலை நேரங்களில் அதிக வேகத்துடன் டூவீலர்களை ஓட்டுகின்றனர். கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலை, பஸ் ஸ்டாண்டில் இந்த ரோமியோக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இவர்களை கட்டுப்படுத்த பரமக்குடி போலீசார் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!